புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை அமைக்க வேண்டும் என்று நான் சட்டப்பேரவையில் வலியுறுத்தியும், சாலை ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டி மறைந்த முதலமைச்சருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்திய போது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விரைவில் சிலை வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
கருணாநிதிக்கு சிலை வைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க ஏன் அரசு மறுத்துள்ளது. மாநில முதலமைச்சர் நாராயணசாமி அரசியல் ரீதியாக தன்னுடைய கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்துவதற்கு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல. இது அவரின் குறுகிய நிலைப்பாட்டை காட்டுகிறது’ என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், புதுச்சேரி அரசு கருணாநிதிக்கு சிலை அமைக்கும் கமிட்டியில் தன்னை உறுப்பினராக நியமித்ததை தான் ஏற்கவில்லை என்றும், கருணாநிதிக்கு முன் இறந்த ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க கமிட்டி அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகுவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: