ETV Bharat / bharat

சட்டப்பேரவை உறுப்பினர்களை அவமதிக்கும் வாட்ஸ் அப் பதிவு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! - சட்டப்பேரவை உறுப்பினர்கள்

புதுச்சேரி: சட்டப்பேரவை உறுப்பினர்களை அவமதித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த ஏனாம் பகுதி அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர்களை அவமதிக்கும் வாட்ஸப் பதிவு: அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

author img

By

Published : Apr 9, 2020, 12:42 PM IST

புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் சட்டப்பேரவை சபாநாயகர் சந்தித்து உரிமை மீறல் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், ”புதுச்சேரி, ஏனாம் மண்டல நிர்வாகியாக செயல்படும் சிவராஜ் மீனா, துணைநிலை ஆளுநர் அவர்களோடு வாட்ஸ் அப் மூலம் சில கருத்துகளை பகிர்ந்தார். அதில் ஏனாம் மண்டல அரசு அலுவலர், புதுச்சேரியை சேர்ந்த ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் உணவுப்பொருட்களை வைத்து மக்களிடம் நாடகம் ஆடுகிறார்கள். நாங்கள் இங்கே நூறு மடங்கு புதுச்சேரியில் உள்ளதைவிட சிறப்பாக செயல்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களை அவமதிக்கும் வாட்ஸப் பதிவு: அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

குறிப்பாக, ’நான் என் தொகுதியிலுள்ள ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய படத்தை போட்டு, மக்களுக்கு செய்த உதவிகளை களங்கப்படுத்தும் விதத்தில் வாட்ஸ் அப்பில், அரசு அலுவலர் பதிவிட்டார். இந்த வாசகங்களை துணைநிலை ஆளுநரும் பதிவுசெய்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களிடம் நாடகம் ஆடுகிறார்கள் என கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்க செயல். சட்டப்பேரவை அலுவல் நடத்தை விதிகளை மீறுதலாகும்" என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக கடிதம் ஒன்றையும் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 5ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.