ETV Bharat / bharat

டிராகன் பழ சாகுபடியில் அசத்தும் பழங்குடியினத் தம்பதி: தன்னம்பிக்கை நட்சத்திரங்கள்! - டார்ஜிலிங் சமீபத்திய செய்திகள்

டார்ஜிலிங்: பழங்குடியினத் தம்பதியினரான பூஷன் மற்றும் அவரது மனைவி அவா டிராகன் பழ சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டிவருகின்றனர்.

dragon fruit
டிரான் பழ சாகுபடி
author img

By

Published : Oct 8, 2020, 1:10 PM IST

Updated : Oct 8, 2020, 1:43 PM IST

கடந்த 1967ஆம் ஆண்டில் விவசாயிகளின் புரட்சியால் உலகளவில் அறியப்பட்ட மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்க் மாவட்டத்தின் நக்சல்பாரி கிராமம் ’டிராகன் ஃப்ரூட்’ சாகுபடிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மாறிவருகிறது. நக்சல்பாரி கிராமத்தின் அருகே அமைந்துள்ள சிறிய கிராமமான ஹதிகிஷா டிராகன் பழ சாகுபடிக்கு பிரபலமானது. அதனைச் சுவைக்க வெவ்வெறு மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் அங்குப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்தப் பழம் கொஞ்சம் இனிப்பு சுவை குறைவாகக் கொண்டுள்ளது என்றாலும், இதில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கரோனா பெருந்தொற்றை எதிர்க்கும் அளவுக்கு சத்துக்கள் இருப்பதாககவும் கூறப்படுகிறது. இந்தப் பழங்களை பயிரிட்டு சாகுபடி செய்து வரும் பழக்குடியினத் தம்பதியினரான பூஷன் டாப்போ, அவரது மனைவி அவா டாப்போ இது குறித்து தெரிவிக்கும்போது, கரோனா காலத்தில் இதன் விற்பனை அமோகமாக இருக்கிறது என்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால் இந்த பேரிடர் காலத்தில் டிராகன் பழத்தின் தேவையும், கூடவே அதன் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 ரூபாய் வீதம் தங்களது வீடு தேடி வந்து மக்கள் வாங்கிச் செல்வதாக அவா தெரிவிக்கிறார்.

முதலில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த இவர்கள், நார்த் பெங்கால் யுனிவர்சிட்டியில் மலர் வளர்ப்பு மற்றும் வேளாண் வணிக மேலாண்மை மையத்தில் (COFAM) இணைந்து டிராகன் பழ விவசாயம் செய்வது குறித்து பயிற்சிப் பெற்றுள்ளனர். அந்த சமயத்தில் வெறும் நான்கு டிராகன் கன்றுகளுடன் தங்கள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இப்போது கிட்டத்தட்ட 123 டிராகன் கன்றுகள் அவர்களது தோட்டத்தில் கொடியாக படர்ந்து கிடப்பதாகக் கூறி அவா டாப்போ புன்னகைக்கிறார்.

டிராகன் பழ சாகுபடி அதிக மெனக்கெடல் இல்லாமலேயே வருமானத்தை ஈட்டித் தரும் என்பதால் பிறரும் இதனைப் பயிரிட இவர்களிடம் ஆலோசனைப் பெற்றுச் செல்கின்றனர். நான்கு மரக்கன்றுகளுடன் டிராகன் பழ சாகுபடியைத் தொடங்கி இந்தத் தம்பதியினரின் தன்னம்பிக்கை மட்டும்தான் அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம்.

ஃபேக்ட் செக்?

டிராகன் பழத்தை கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள உண்ணலாம் என்ற செவி வழிக்கதை உண்மைதானா? என தெரிந்துகொள்ள சிலிகுரி டிவிசனைச் சேர்ந்த மருத்துவர் பூட்டியாவிடம் கேட்டபோது, கரோனாவிற்கு இதுவரை எவ்வித தடுப்பூசியும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், உணவு வகைகளைத்தான் பரிந்துரைக்கிறோம். அந்த வகையில் டிராகன் பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் ’சி’, இதர தாதுக்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மேல் வருவாய் ஈட்டும் பி.டெக் முடித்த ஹை-டெக் விவசாயி...!

Last Updated : Oct 8, 2020, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.