ETV Bharat / bharat

ராகுல் குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - குரல் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி., வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.,க்கள்! - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் எம்.பி., எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

Adhir Ranjan Chowdhury
author img

By

Published : Nov 19, 2019, 1:47 PM IST

நாட்டின் அச்சுறுத்தல் சூழலில் இருக்கும் முன்னாள், இந்நாள் பிரதமர் குடும்பங்களுக்கு ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப் (எஸ்.பி.ஜி.) எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், வயநாடு எம்.பி., ராகுல் காந்திக்கும் நீண்ட நாட்களாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சமீபத்தில் திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, " சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சாதாரண நபர்கள் அல்ல. வாஜ்பாய் ஆட்சியிலிருந்தபோதும்கூட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

1991ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு முறை ஆட்சிக்கு வந்தபோதும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அகற்றப்பட்டதில்லை" என்று பேசினார்.

ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: பிகார் முதலமைச்சரைப் பாராட்டிய பில்கேட்ஸ் - ஏன் தெரியுமா?

Intro:Body:

Congress leader Adhir Ranjan Chowdhury about SPG cover

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.