டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பரப்புரை செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லி பல்கலைகழத்தில் சேர்வதால், டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில் உள்ளூர் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். டெல்லி பல்கலைகழகத்தில் சிபிஎஸ்இ முறையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அரசும் கல்லூரிகளுக்கு கிரேஸ் மதிப்பெண் வழங்கிறது. ஆனால் டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் ஒதுக்கீடு கிடையாது. இது தான் பிரச்னை.
டெல்லியில் உள்ள பள்ளிகளில் தமிழ் குழந்தைகள் கூடப்படிக்கிறார்கள் மற்ற மொழி குழந்தைகள் கூட படிக்கிறார்கள். அவர்கள் டெல்லி பல்கலைகழகத்தில் படிக்க வரும் போது கூட இந்த பிரச்னையை சந்திக்கலாம். இப்படிப்பட்ட பிரச்னைகளால் தான், டெல்லிக்கு மாநில அந்தஸ்து தேவை. கெஜ்ரிவால் பேசும் போது, உண்மையில், பிழை நடந்திருக்கலாம். அவர் தவறாக கூறவில்லை. அவர் வேதனையை வெளிப்படுத்தினார். உண்மையான விவகாரத்தை எடுத்து வைத்தார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பிரகாஷ்ராஜின் கருத்து தமிழக மாணவர்களுக்கிடையே எதிராக உள்ளதாக கூறி பலரும், சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டு மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மைதான் என்று நான் சொல்லவில்லை. தவறான எண்ணத்துடன் எனது கருத்தை வேறுமாதிரி திரித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.