உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பெண் ஒருவர் தன்னை நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட அந்த நான்கு பேரும் திராவகத்தை வீசியுள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் மீது திராவக (ஆசிட்) வீச்சில் ஈடுபட்ட ஆரிப், ஷாநவாஸ், ஷெரீப் மற்றும் அபித் ஆகிய நான்கு பேரைக் காவலர்கள் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திராவக வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு மீரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவரின் உடலில் 30 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தங்களுக்கு எதிரான பாலியல் வழக்கை அப்பெண் திரும்ப பெறாததால், அவர் மீது திராவக வீச்சில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: நான் ஏன் வெட்கப்பட வேண்டும்; இந்த சமூகம் தான் வெட்கப்படவேண்டும் - 'சிங்கபெண்' லக்ஷ்மி அகர்வால்