ETV Bharat / bharat

2 பெண்கள் மீது திராவக வீச்சு! - ஆசிட் வீச்சு

அமிர்தசரஸ்:  கோட் மங்கல் சிங் பகுதியில் 19 வயதுடைய இரண்டு பெண்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திராவகம் வீசிச் சென்றது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Acid Attack
author img

By

Published : Apr 28, 2019, 12:26 PM IST

பஞ்சாப் மாநிலம் கோட் மங்கல் சிங் பகுதியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கைக்கூட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அப்பெண்கள் மீது திராவகம் வீசிச் சென்றுள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு முகத்திலும், மற்றொரு பெண்ணுக்கு மார்புப் பகுதியிலும் திராவகம் பட்டு படுகாயமடைந்தனர்.

பின்னர், படுகாயமடைந்த பெண்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதில் ஒரு பெண் திருமணமானவர். அவர் தனது வேலை நிமித்தமாக தனது தோழியை சந்திக்க கோட் மங்கல் பகுதிக்கு வந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தற்போது ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகவும், அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியபிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.