பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா இன்று மாலை மாரடைப்பு காரணமாக உத்திரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதஞ்சலி யோகா பீடத்தின் ஆயுர்வேத மையம் மூலம் பாரம்பரிய ஆயுர்வேத முறைகளை பரப்புவதில் பாபா ராம்தேவுக்கு உதவியாளராக பாலகிருஷ்ணா இருந்துள்ளார். இவர் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
1995ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் இணைந்து ஹரித்வாரில் திவ்ய யோகா மருந்தகத்தை நிறுவினர். மேலும் 2006ஆம் ஆண்டு பதஞ்சலி ஆயுர்வேத நிறுவினத்தை தொடங்கி மூலிகை ஆயுர்வேத தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.