பெங்களூரு: இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தின் குனிகல் என்ற பகுதியில், பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா நோக்கி சென்ற காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தோரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.