பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான பதிவுகளை ட்விட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரக்காண்ட்டில் இயங்கிவரும் லால் பகதூர் சாஸ்திரி குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சி மையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான ட்வீட்டுகளை சிலர் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவுகளை கண்டித்து உத்தரக்காண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சைபர் சிறப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அடையாளர் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் பிரிவின் துணை காவல் ஆய்வாளர் ரிதின் அகர்வால் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்ற அலுவலர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான ட்வீட்களை சிலர் பதிவிட்டுள்ளனர்.
-
We strongly condemn the abusive & derogatory remarks on Twitter regarding lady IPS officers. We believe the concerned police agencies will do thorough investigation to expeditiously bring culprits to book. We solemnly resolve to protect the dignity of lady officers.
— IPS Association (@IPS_Association) June 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We strongly condemn the abusive & derogatory remarks on Twitter regarding lady IPS officers. We believe the concerned police agencies will do thorough investigation to expeditiously bring culprits to book. We solemnly resolve to protect the dignity of lady officers.
— IPS Association (@IPS_Association) June 4, 2020We strongly condemn the abusive & derogatory remarks on Twitter regarding lady IPS officers. We believe the concerned police agencies will do thorough investigation to expeditiously bring culprits to book. We solemnly resolve to protect the dignity of lady officers.
— IPS Association (@IPS_Association) June 4, 2020
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் இதற்கு கடும் கண்டனங்கள் விடப்பட்டுள்ளன. தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாதிரியான பதிவுகளை உடனடியாக நீக்கக் கோரி ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ட்விட்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Today some lady IPS Officers have been targeted with abusive, derogatory and obscene content by certain twitter accounts. The Academy strongly condemns this malicious and derogatory tweet and has lodged an F.I.R. with Uttrakhand Police in this regard.
— LBSNAA (@LBSNAA_Official) June 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today some lady IPS Officers have been targeted with abusive, derogatory and obscene content by certain twitter accounts. The Academy strongly condemns this malicious and derogatory tweet and has lodged an F.I.R. with Uttrakhand Police in this regard.
— LBSNAA (@LBSNAA_Official) June 4, 2020Today some lady IPS Officers have been targeted with abusive, derogatory and obscene content by certain twitter accounts. The Academy strongly condemns this malicious and derogatory tweet and has lodged an F.I.R. with Uttrakhand Police in this regard.
— LBSNAA (@LBSNAA_Official) June 4, 2020
இதையும் படிங்க: 4 மாத குழந்தைக்கு பால் வழங்கிய மனிதநேய காவலருக்கு அமைச்சர் சன்மானம்!