ETV Bharat / bharat

நாட்டை விட்டு ஓடிய மெஹூல் சோக்ஸி போன்றவர்களிடம் நிதியை காங்கிரஸ் பெற்றுள்ளது!

டெல்லி : வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி போன்றோரிடமிருந்த ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிதி பெற்றுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Aug 31, 2020, 7:08 PM IST

நாட்டை விட்டு ஓடிய மெஹூல் சோக்ஸி போன்றவர்களிடம் நிதியை காங்கிரஸ் பெற்றுள்ளது!
நாட்டை விட்டு ஓடிய மெஹூல் சோக்ஸி போன்றவர்களிடம் நிதியை காங்கிரஸ் பெற்றுள்ளது!

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,"காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினரால் இயக்கப்பட்டுவரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையானது, வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்கு சொந்தமான கீதாஞ்சலி குழுமம் இயக்கிவந்த எம். எஸ் நவீராஜ் எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்திடமருந்து 29 ஆகஸ்ட் 2014 அன்று காசோலை எண் 676400 மூலம் ரூ.10 லட்சத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

மேலும், வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூலமாக நிதியைப் பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதியன்று ஜிக்னேஷ் ஷாவின் எஃப்.டி.ஐ.எல் நிறுவனம், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ .50 லட்சம் நன்கொடை அளித்தது.

அதேபோல, யெஸ் வங்கியின் ராணா கபூரும் நிதி அளித்துள்ளார். பணமோசடியில் ஈட்டிய பணத்தை தான் இவர்கள் வழங்கியுள்ளனர். அவை யாருடைய பணம் உங்களுடைய பணம், நம்முடைய பணம்" என்றார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பண மோசடி தடுப்பு சட்டம், வருமான வரி சட்டம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் போன்ற சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.