நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதிகரித்துவருகிறது.
அதிகபட்சமாக நாட்டின் வர்த்தக பீடமான மகாராஷ்டிராவை இந்தப் பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அம்மாநிலத்தில் புதிதாக 12 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புனே - 5
- மும்பை - 3
- நாக்பூர் - 2
- கொல்ஹாபூர் - 1
- நாசிக் - 1
புதிதாகப் பாதிக்கப்பட்ட 12 பேருடன் சேர்த்து அங்கு மொத்தம் 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள லோக் நாயக் மருத்துவமனையில் நேற்று இரவு மட்டும் 85 பேர் கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த மருத்துவமனையில் கோவிட்-19 ஆல் மொத்தம் 106 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.