சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகியின் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தவர் சந்தோஷ் கவுசிக். பிலாஸ்பூரில் உள்ள அஜித் ஜோகியின் வீட்டில் சந்தோஷ் கவுசிக் ஜனவரி 15ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அஜித் ஜோகி, அவரின் மகன் அமித் ஜோகி ஆகியோர்தான் தனது சகோதரரை தூண்டிவிட்டு தற்கொலை செய்துகொள்ள வைத்ததாக சந்தோஷின் சகோதரரான கிருஷ்ணகுமார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அஜித் ஜோகி, அமித் ஜோகி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகுமார், திருட்டு வழக்கை பொய்யாகப் பதிவுசெய்து தன் சகோதரரை சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காங்கிரஸ் அரசு தங்களின் மீது பொய்வழக்குப் பதிவுசெய்துள்ளதாக அமித் ஜோகி கூறியுள்ளார். அதனால்தான் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுப்பதாக அமித் ஜோகி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதி' - சந்திரசேகர ஆசாத்