சர்ச்சைக்குரிய குடியுரிமை அமர்வு மசோதாவுக்கு எதிராக போராட்டம் மீண்டும் அசாமில் தொடங்கி உள்ளது. அனைத்து அசாம் மாணவர் ஒன்றியமும் இன்று தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.
இதில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அசாமில் இதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.
தேசிய குடியுரிமை திருத்த மசோதா பல்வேறு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் அளிக்கிறது. மற்ற மதத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த மசோதா மட்டுமின்றி, பெரிய (கிரேட்டர்) நாகாலாந்து ஒப்பந்தத்தையும் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம், மணிப்பூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இதுதொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கமிட்டி குழு தலைவர் மணிப்பூர், அசாமில் இருந்து ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். முன்னதாக உள்துறை அமைச்சர், பிரதமரை சந்தித்த அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனாவால் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவில் அசாம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அவர்கள் உறுதியளித்திருப்பதாக கூறியிருந்தார்.
தேசிய குடியுரிமை திருத்த மசோதா அசாமை போன்று வேறு சில மாநிலங்களிலும் விரிவாக்கப்படும் என்று அமித் ஷா ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.
இதையும் படிங்க : சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்' - அமித் ஷா