அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள யாவருக்கும் இந்த பிரிவு 6-ஐ புரிந்து கொள்வது என்பது கடினமான விஷயம். கடந்த 1985-ம் ஆண்டு இந்த அஸ்ஸாம் பதிவேடு உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகியும் அஸ்ஸாமின் பூர்வகுடிகள் யார் என்பதை இந்த பிரிவு - 6 சரியாக விளக்கவில்லை.
இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் அஸ்ஸாம் பிரிவு 6 பகுதி விதியை திருத்தியமைக்க உயர்நிலை மட்டக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அஸ்ஸாமில் அமல்படுத்தப்படவுள்ளளது.
விதிகளுக்கு புறம்பாக அஸ்ஸாமில் வந்து குடியேறிய வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1985- ம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாணவர் சங்கம் (AASU) நடத்திய போராட்டங்களில் 880 இளைஞர்கள் பலியாகினர். அதனால், அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
மாணவர் அமைப்புகள் வைத்த கோரிக்கைக்கும் மற்ற அமைப்புகள் வைத்த வேண்டுகோளுக்குமிடையே அரசியல்ரீதியான ஒதுக்கீடு, பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த விவகரங்களில் முக்கிய கருத்து வேறுபாடு உள்ளது.
“இது ஒரு வரலாற்று ஆவணமாகவும் அஸ்ஸாமின் உண்மையான பூர்வக்குடிகளை அடையாளம் காட்டும் ஆவணமாகவும் இருக்கும். அஸ்ஸாம் மாணவர் அமைப்பு விடுத்த கோரிக்கைக்கும் மற்ற அமைப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அஸ்ஸாம் மக்களுக்கு காட்டும் ஆவணமாகவும் அமையும்” என்று நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் வேலை வாய்ப்பில் அஸ்ஸாம் பூர்வக்குடிகளுக்கு 100 சதவிகித ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென அஸ்ஸாம் மாணவ அமைப்பு வேண்டியது. அதே வேளையில், மற்ற அமைப்பினர் பூர்வக்குடிகளுக்கு 67 சதவிகிதமும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 16 சதவிகித இட ஒதுக்கீட்டை கோரினர்.
வேலை வாய்ப்புகளில் பூர்வக்குடிகளுக்கு அஸ்ஸாம் மாணவர் அமைப்பு 100 சதவிகித இட ஒதுக்கீட்டை கோரிய நிலையில் , மற்றவர்கள் 80 சதவிகித இட ஒதுக்கீட்டை வேண்டினர். அஸ்ஸாம் சட்டசபை முன்னாள் சபாயநாயகர் பிரணாப் கோகளய், 'இந்த ஆவணம் பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையான அஸ்ஸாமியை இந்த ஆவணம் அடையாளம் காட்டும்' என்கிறார்.
இந்த நிலைக்குழு கமிட்டி உறுப்பினர்களிடையே, அரசு வழங்கும் ஆவணங்களின் அடிப்படையில், 1951-ம் ஆண்டு வகுக்கப்பட்ட அஸ்ஸாமின் பூர்வக்குடிகள் யார் என்பதை அடையாளப்படுத்தும்' இன்னர்லைன் பெர்மிட் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளில் ஒருமித்த கருத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
1826ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு இன்னர் லைன் பெர்மிட்டை அனுமதிப்பதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமில்லாத காரணத்தினால் 1951- ம் ஆண்டு கணக்கில் கொள்ளப்பட்டதாக தகவல்கள் உள்ளன. 1826- ம் ஆண்டு முதல் பிரிட்டன் மற்றும் பர்மா போருக்குப் பிறகு யாந்தபூ ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கும் பர்மியர்களுக்குமிடையே ஏற்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், அஸ்ஸாம் பிரிவு 6 பகுதியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.
அஸ்ஸாம் மாநிலத்தின் தனித்துவமான விசித்திரமான வரலாறு அப்படியானது. உதாரணத்துக்கு ஒருவர் அஸ்ஸாமி என்பதற்காக பல அடையாள ஆவணங்களை வைத்திருந்தாலும், அவரை பூர்வக்குடியாக எடுத்துக்கொள்ள முடியாது. பிரிவு 6 அறிக்கையே ஒருவர் அஸ்ஸாமின் பூர்வக்குடியா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
அஸ்ஸாமிய மக்களின் கலாசாரம், சமூக, மொழி அடையாளம் , பாரம்பரிய பாதுகாப்பு அதை மேம்படுத்துதல், ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற நிர்வாக பாதுகாப்புகளை அடிப்படையாக கொண்டு யார் அஸ்ஸாமி என்பதை பிரிவு 6 தீர்மானிக்கிறது. அஸ்ஸாமை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை தாக்கல் செய்து மக்களின் கோபத்தை பெற்றுள்ளது. இந்த கோபத்தை குறைக்கும் வகையில் பிரிவு 6 - ஐ அஸ்ஸாமில் அமல்படுத்தி பாஜக குளிர்காய நினைக்கும்.
இந்தியாவை போலவே அஸ்ஸாமும் பல்வேறு கலாசாரங்கள், நகரிகங்கள் இணைந்த ஒரு பகுதியாகும். மிகவும் வளமான மண்ணை கொண்ட இந்த பரந்தவெளி பிரதேசத்தில், முடிந்த அளவு மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குடியேறியுள்ளனர்.உண்மையான அஸாமிகளை தவிர மற்ற மக்கள் தங்களை சீனா, மியான்மர், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகள் மற்றும் வட இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பதை உணர்ந்தே உள்ளனர்.
வரலாற்றின் பல்வேறு கட்டங்களின் இத்ததைய இடம் பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சூழல் விதிகளை வகுப்பதில் பலவிதத குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.