ETV Bharat / bharat

பயனாளர் தரவைச் சேகரிப்பதில் ஆரோக்கிய சேது ஓகே தான்: அறிக்கை சொல்லுது! - பயனாளர் தரவை சேகரிப்பதில் ஆரோக்கிய சேது ஓகே தான்: அறிக்கை சொல்லுது!

டெல்லி: ஆரோக்கிய சேது பயனாளர்களின் தரவுகளை சேகரிப்பதில் எம்.ஐ.டி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களால் ஐந்துக்கு இரண்டு மதிப்பெண் வாங்கியுள்ளார்.

பயனாளர் தரவை சேகரிப்பதில் ஆரோக்கிய சேது ஓகே தான்: அறிக்கை சொல்லுது!

author img

By

Published : May 11, 2020, 10:00 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கரோனா பாதிப்புக்குள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை (ஆப்) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் செயல்படும் இந்தச் செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும். இந்த `ஆரோக்கிய சேது' (Aarogya Setu) செயலி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு (National Disaster Management Authority) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தச் செயலியை இதுவரை 100 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலில் பயனாளர்களின் தகவல்கள் திருடு போவதாகவும், இந்தச் செயலியை சுலபமாக ஹேக் செய்யலாம் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து ஆய்வு செய்த எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவின் ஆராய்ச்சியாளர்கள் இந்த செயலியை 25 பிற நாட்டு செயலிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

முடிவில், ஆரோக்கிய சேது செயலி ஐந்துக்கு இரண்டு மதிப்பெண் வாங்கியுள்ளது. இதில், பயனாளர் தரவை சரியான நேரத்தில் நீக்குவது, சேகரிப்பது சரியாக உள்ளதாகவும் மற்றும் பயனுள்ள தரவுகளை மட்டுமே சேகரிப்பது குறித்து சாதகமான் மதிப்பெண்களை வழங்கியுள்ளது. ஆனால், வெளிப்படைத்தன்மை, தன்னார்வ பயன்பாடு ஆகிய அந்த அளவுக்கு சரியாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.