ETV Bharat / bharat

ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று! - அதிஷி மார்லேனா

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி மார்லேனாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

COVID-19 outbreak  Coronavirus crisis  Coronavirus cases in India  COVID-19 cases in India  டெல்லி எம்எல்ஏ கரோனா தொற்று  டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ  அரவிந்த் கெஜ்ரிவால்  அதிஷி மார்லேனா
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏவுக்கு கரோனா தொற்று
author img

By

Published : Jun 17, 2020, 5:05 PM IST

Updated : Jun 17, 2020, 5:16 PM IST

டெல்லி கல்காஜி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி மார்லேனாவுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அக்ஷய் மராத்தா, ஆலோசகர் அபிநந்தன் தயால் முத்தாருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்று உறுதியான சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி மார்லேனா தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கரோனா அறிகுறி இருந்ததாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு நடத்திய கரோனா தொற்று சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெளிவானது.

இதேபோல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா: மருத்துவச் சோதனையை விரிவுபடுத்த கர்நாடகா திட்டம்!

Last Updated : Jun 17, 2020, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.