கரோனா தொற்று காலத்தில் தங்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் கருதாமல் சாலைகளில் தூய்மைப் பணிகளை தூய்மைத் தொழிலாளர்கள் செய்துவருகிறார்கள்.
அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் ஹர்நம் சிங் என்பவரும் அனைத்து இந்தியா மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தனர்.
அதை, நீநிபதிகள் ஹுமா கோலி, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, அரசுடன் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன என்று கேள்வியெழுப்பியிருந்தது.
அதற்கு டெல்லி அரசு, கரோனா காலத்தில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அளித்த கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் அடங்கிய தொகுப்பின் விவரத்தை விலாவாரியாக பிரமாண பத்திரம் மூலம் தாக்கல்செய்தது.
அதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை டெல்லி அரசு உத்தரவின்பேரில் மாநகராட்சிகளும் எடுத்துள்ளன என்றும் மேலும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றிவருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜெயஸ்ரீ கொலை வழக்கு: நியாயம் கேட்டு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினி கைது!