கரோனா அச்சுறுத்தலில் ஊரே வீட்டினுள் அடைந்து கிடந்தாலும், தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்துவருகின்றனர். கரோனாவால், அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பெரும்பாலும், இந்த பணியாளர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கின்றனர். காலை, இரவு என சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், கால் வலி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த வேளையில், அவர்களுக்கு உதவ களமிறங்கியிருக்கிறார், புதுச்சேரி பிசியோதெரபிஸ்ட் பாஸ்கர்.
தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு, நேரடியாகச் சென்று, ஓய்வுநேரங்களில் அவர்களுக்கு இலவசமாக பாத அழுத்த சிகிச்சை செய்கிறார். அதேபோல், புதுச்சேரி காவலர்களுக்கும் பாத அழுத்த சிகிச்சை செய்தார். இவரின், தன்னலமில்லா சேவையை, காவல் துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் ஊடகவியலாளர் செராவிடம் காவல் துறை விசாரணை