நாடு முழுவதும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும், மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் களத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முனைந்துள்ள கரோனா வாரியர்ஸ்களுக்கு கர்நாடக மாநிலம் ஹம்லி மாவட்டத்திலுள்ள கலகாட்டாகி பகுதியைச் சேரந்த இளைஞர்கள் இலவசமாக முகக்கவசம் செய்து விநியோகித்துவருகின்றனர்.
இவர்கள் முதல்கட்டமாக, ஐநூறு முகக்கவசங்களைத் தயாரித்து காவலர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் விநியோகம்செய்துள்ளனர். தற்போது இரண்டாம் கட்டப் பணிகளில் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸ்க்கு உணவு வழங்கிய சிற்பக் கலைஞர்!