ETV Bharat / bharat

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கே.எஸ்.கே அமைப்பு - சோனட் எனப்படும் சேவை

எது சரி எது தவறு என்பது குறித்து அறியாமல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாமல் துன்ப மனநிலையுடன் சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு காவியா என்பவர் உதவி செய்துவருகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் காவியா மற்றும் அவரது குழுவினர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை வழங்கிவருகின்றனர்.

service
service
author img

By

Published : Apr 28, 2020, 9:32 AM IST

சாதாரண நாள்களிலேயே யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருவரை ஒருவர் சந்தேக கண்களுடன் பார்த்து கொள்ளும் இம்மாதிரியான பெருந்தொற்று காலத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது யார் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள்.

எது சரி எது தவறு என்பது குறித்து அறியாமல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாமல் துன்ப மனநிலையுடன் சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு காவியா என்பவர் உதவி செய்துவருகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் காவியா மற்றும் அவரது குழுவினர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை வழங்கிவருகின்றனர். இம்மாதிரியான இக்கட்டான காலகட்டத்தில், அவர்களை கடவுளின் தூதர்களாக மக்கள் பார்க்கின்றனர்.

முகலாயர்கள் கட்டி எழுப்பிய அழகிய கட்டுமானங்களை கொண்ட ஹைதராபாத்தில்தான் பல அசுத்தமான இடங்களும் உள்ளன. பல நட்சத்திரங்களின் வீடுகள் உள்ள அதே ஹைதராபாத்தில்தான் யாரும் கவனம் செலுத்த விரும்பாத படிப்பறிவு இல்லாத, ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களின் வீடுகளும் உள்ளன.

இப்படிப்பட்ட மக்களின் பசியைப் போக்கும் விதமாக காவியா மற்றும் அவரது குழுவினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். லும்பினி பூங்கா, கோட்டி அரசு மருத்துவமனை, தலைமைச் செயலகம் போன்ற இடங்களில்தான் மக்கள் அதிகம் கூடுகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலிகள் ஆகியோரை தேடி இந்த குழு நகரம் முழுவதும் அலைகிறது. தினமும் உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்க இக்குழு முயற்சித்துவருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்ட இக்காலக்கட்டத்திலும் சுத்தத்தை நோக்கமாக கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் இக்குழு உணவு வழங்கிவருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த காவியா ஐந்தாண்டுகளுக்கு முன்பே கே.எஸ்.கே. என்ற அமைப்பை தனது நண்பர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் துணையோடு உருவாக்கினார்.

தொடக்கக் காலத்தில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், காந்தி மருத்துவமனை அருகே உள்ளவர்களுக்கு இக்குழு தேவையானவற்றை வழங்கிவந்தது. ‘New Shelter Foundation’ என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு இக்குழு ஆதரவாக இருந்துள்ளது.

எம்.பி.ஏ. பட்டதாரியான காவியா, மக்கள் தொடர்பு மேலாளராக பணியாற்றிவருகிறார். பெரிய பதவியில் உள்ள ஸ்ரீகாந்த் படித்துக்கொண்டே மற்ற இருவருக்கும் உதவி செய்துவருகிறார். அமைப்பின் சார்பாக மேற்கொள்ளப்படும் செலவுகளை அவர்களே கவனித்துவருகின்றனர்.

பிறர் அளிக்கும் நன்கொடையை பெற்றும் அமைப்பின் செலவுகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். தொடக்க காலத்தில், எலுமிச்சை, தயிர் சாதம் ஆகியவற்றை வழங்கிவந்துள்ளனர். தற்போது, பிரட், பிஸ்கட், பழங்கள், முட்டைகள் ஆகியவற்றை வழங்கிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.