அமராவதி(ஆந்திரப் பிரதேசம்): பேருந்தை திருடி, ஓட்டிச்சென்ற நபரைத் துரத்திப் பிடித்து ஆந்திர காவல் துறையினர் கைது செய்தனர்.
அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம் ஆர்.டி.சி பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து பேருந்தைத் திருடியுள்ளார், அந்நபர். அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் பேருந்தை விரட்டிச் சென்று, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது கியா நிறுவனத்துக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.