கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் பிரத்துன்யாக தண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். மகாரஷ்டிராவில் பணிபுரிந்துவந்த இவர் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளியின் கதவை உடைத்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பியுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர், அவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மையத்திலிருந்து வெளியேற வேண்டாம் என வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் அவர்களை தாக்கியுள்ளார்.
பின்னர் காவல் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து விசாரிக்க வந்த கூடுதல் காவல் ஆய்வாளரையும் தாக்கியுள்ளார். வெங்கடேஷுக்கு உதவியதாக அவரது சகோதரர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிழக்குப் பெங்களூரு மக்களை பீதிக்குள்ளாக்கிய விநோத சத்தம்!