ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த அனகபள்ளியில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை நாகசாய் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்நது மாணவியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவியின் கழுத்து, தோள்பட்டை, மார்பு, விலா எலும்புகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் நாகசாய் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை ஏற்க மறுத்த மாணவி கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.