அன்னை தெரசாவின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு முதலைச்சர் நாராயணசாமி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி முதலைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அன்னை தெரசாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தித் துறை இயக்குநர் வினைராஜ் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் மிஷினரிஸ் ஆப் சாரிட்டி வளாகத்திலும் அன்னை தெரசாவின் படத்துக்கு மாலை அணிவித்து சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.