கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹிரியூருவில் அமைந்துள்ள யடியூரு சித்தலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு பல மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யடியூரு சித்தலிங்கேஸ்வரர் மீது கொண்ட பக்தியினால் ரூ .10 கோடி மதிப்பு கொண்ட 19 கிலோ எடையுள்ள தங்க தேரினை காணிக்கையாக அளித்துள்ளனர். மேலும் சிவக்குமார் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ணயா ஷெட்டி & நிறுவனம் இந்தத் தேரினை வடிவமைத்துள்ளது.