இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், "புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும், மாகி அரசு மருத்துவனையில் ஒருவர் என மூன்று பேர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில், மாகியில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால், புதுச்சேரியின் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய மூன்று பிராந்தியங்களில் கரோனா நோயாளிகள் இல்லை. புதுவை அரசு மருத்துவமனைகளில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் பண்ருட்டியைச் சேர்ந்த 3 பேர், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் என, மொத்தமாக 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டமான கடலூர், விழுப்புரத்தில் நேற்றைய தினம் மட்டும் 77 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்