ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் முதல் உயிரிழப்பு! - ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 65 வயதான முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 26, 2020, 10:09 AM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 592 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 553 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஸ்ரீநகரைச் சேர்ந்த 65 வயது ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.