பெண்மணி ஒருவர் பிரசவத்திற்காக மும்பை கேமா மருத்துவமனை செல்ல டோம்பிவ்லி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். ரயிலுக்காக காத்திருந்த அவருக்கு அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, வலியில் துடித்த அவரை அருகில் இருந்தோர் அங்கிருந்த மருத்துவ உதவி மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கிருந்தவர்கள் பிரசவம் பார்த்ததில் அவருக்கு அங்கேயே ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவம் டோம்பிவ்லி ரயில் நிலைய பயணிகள் மத்தியில் அங்குள்ள மருத்துவ உதவி மையத்தின் மீது மரியாதையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் சிகிச்சைக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாங்குவது குறிப்பிடத்தக்கது.