கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலத்தின் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர், "மாநிலத்தில் தற்போது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 97 விழுக்காட்டினர் கரோனா அறிகுறி அற்றவர்கள் என்பது ஒரு நல்ல செய்தி.
இருப்பினும். அறிகுறி அற்றவர்கள் மூலம் கரோனா பரவாது என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. மாநிலம் முழுவதும் தற்போது 3,248 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
அவர்களில் 3,148 பேர் எவ்வித அறிகுறிகளும் அற்றவர்கள். அதாவது 97 விழுக்காட்டினருக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படுவதில்லை. மாநிலத்திலுள்ள கரோனா நோயாளிகளில் மூன்று விழுக்காடு, அதாவது 100 நோயாளிகளுக்கு மட்டுமே கரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் வெளிப்படுகின்றன" என்றார்.
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 6,041 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கரோனாவிலிருந்து பாதுகாக்குமா? - புதிய ரிப்போர்ட்