ETV Bharat / bharat

வரும் 20ஆம் தேதி 90% தொழிற்சாலைகள் இயங்கும் - புதுச்சேரி முதலமைச்சர் - 90 percent factory in Puducherry on 20th

புதுச்சேரி: மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி 90 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ
முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ
author img

By

Published : Apr 16, 2020, 11:50 AM IST

புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு, 90 விழுக்காடு தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகின்றனர். புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு, 90 விழுக்காடு தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "இது குறித்து தொழில்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் இணைந்து விரைவில் முடிவு எடுப்பார்கள். கார்பென்டர், பிளெம்பர், பெயிண்டர் இப்படி பல்வேறு தொழில் செய்பவர்கள் 20ஆம் தேதிக்குப் பிறகு தொழிலை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டிய கடைகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ

நகரப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 3 கிலோமீட்டர் அளவிலும், கிராமப்பகுதிகளில் 5 கிலோமீட்டர் அளவிலும் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதன்படி பார்த்தால் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளரிடம் பேசினேன். அதற்கு அவர் மாநிலத்தில் அதற்கான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், கரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அப்படி கடைப்பிடித்தால் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்" எனவும் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அவசர கால பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.