இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழ்மை குறித்து ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், 2005 முதல் 2015ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 27 கோடி இந்தியர்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மேற்கோள்காட்டிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம், பாஜகவின் தவறான கொள்கைகளால் ஒன்பது காலாண்டுகளாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவருவதாகவும் 2020-21ஆம் ஆண்டு தேக்கநிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்த சாதனைகளை விமர்சிப்பவர்கள் பாஜகவின் அறியாமை மற்றும் திறமையின்மையை பார்த்து பொருளாதார வல்லுநர்கள் சிரிப்பதை உணர வேண்டும். 2015ஆம் ஆண்டிலிருந்து தேசிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட தவறான கொள்கைகளால் கடந்த ஒன்பது காலாண்டுகளாக பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துவருகிறோம். 2020-21ஆம் ஆண்டு தேக்கநிலை ஏற்படவுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த காலம் இந்திய பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூழலுக்கு ஏற்றார்போல் ஐநாவில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - மோடி