தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு புறப்பட இருந்த 9 பெண்கள் போலி விசா வைத்திருந்தது விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, கைது செயயப்பட்ட அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கேரளா, தமிழ்நாடு, அந்திர பிரதேசம் ஆகிய மாநிலத்ததை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இது குறித்து தகவல் அளித்துள்ள விமான நிலைய காவல்துறை அதிகாரி விஜய் பாஸ்கர், போலி விசாவை எப்படி பெற்றார்கள் என்பது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறதாக தெரிவித்தார்.