போபால் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது தேர்தல் நடைப்பெற்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பின் பிரக்யா தான் கூறியதை திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் எதிர் கட்சிகள் இது குறித்து பல வகையில் பாஜகவை விமர்சனம் செய்துவருகின்றன.
அந்தவகையில்,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரக்யா சிங் தாக்கூரை ஏன் இன்னும் பாஜக கட்சியை விட்டு நீக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்திய மக்கள் முன்புன் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்