இந்திய வரலாற்று காங்கிரஸின் 81ஆவது அமர்வு டிசம்பர் 28-30ஆம் தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி, 'இந்திய நாகரிகம்: வரலாற்று முன்னோக்குகள்' என்ற தலைப்பில் காணொலி மூலம் டிசம்பர் 28 அன்று பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரையிலும், டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதிய கரோனா பரவல் காரணமாக, இந்திய வரலாற்று காங்கிரசின் 81ஆவது அமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வரலாற்று காங்கிரஸின் 81ஆவது அமர்வின் தொடக்க உரையை பிரபல வரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப் வழங்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அயராது உழைத்து ஆட்சி அமைப்போம் - கே.பி.முனுசாமி