ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் தேசிய காவல் அகாதமியின் 80 ஊழியர்களுக்கு கரோனா! - தேசிய காவல் அகாடமி ஊழியர்களுக்கு கரோனா

ஹைதராபாத்திலுள்ள தேசிய காவல் அகாதமியில் பணிபுரியும் 80 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

80 admin staff of National Police Academy in Hyderabad test COVID positive

author img

By

Published : Sep 8, 2020, 12:52 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், வைரஸ் (தீநுண்மி) பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமியில் நிர்வாக மற்றும் பராமரிப்புத் துறைகளில் பணிபுரியும் 80 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் யாரும் பயிற்சி அளிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என்று அகாதமியின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக தேசிய காவல் அகாதமி தற்போது மூடப்பட்டுள்ளது, வெளியாள்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அந்த அலுவலர் கூறுகையில், "ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கும் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. அவசரம் இல்லாத அனைத்து நிர்வாகப் பணிகளையும் நாங்கள் தற்போது ஒத்திவைத்தோம்" என்றார்.

மேலும், கரோனா உறுதிசெய்யப்பட்ட 80 பேரும் வெவ்வெறு இடங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களது உடல்நிலை சீராகவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாழ்வாதாரத்தை மீட்க ஆட்டோவில் நெல்லிக்காய் விற்கும் ஓட்டுநர் - தன்னம்பிக்கை மனிதன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.