சீனா, பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்ராவில் எட்டு பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. இது குறித்து மாநில நோய் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பிரதீப் அவதே கூறும்போது, "ஆறு நோயாளிகள் ஏற்கனவே கண்காணிப்பில் இருந்தனர். இருமல், லேசான காய்ச்சல், கரோனா வைரஸைப் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மேலும் இரண்டு பேர் செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் ஐந்து பேர் மும்பையைச் சேர்ந்த கஸ்தூர்பா மருத்துவமனையிலும், இருவர் புனேவின் நாயுடு மருத்துவமனையிலும், ஒருவர் நந்தேடு மாவட்டத்திலுள்ள சிவில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் மாநில அலுவலர்கள் இந்த வைரஸ் தொற்று உள்ளதா என மூன்றாயிரத்து 997 நபர்களைச் சோதனை செய்துள்ளனர்.
அவர்களில் நேர்மறையான தொற்று ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், சீனாவிற்குச் சென்று ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு திரும்பிய மக்கள் இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அரசு மருத்துவணைகளுக்கு சென்று தகவல் தெரிவிக்கும்படி வேண்டுகோள்விடுத்துள்ளோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: வைரஸை தடுக்க 640 மில்லியன் டாலர் ஒதுக்கியது சீனா!