இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, இந்தியாவில் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 75.3 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் உயிரிழந்தவர்களில் 83 விழுகாட்டினர் நாள்பட்ட வியாதியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், கரோனா பாதித்தவர்களின் சிகிச்சைக்காக பயன்படும் மருந்துகள் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுத்துகிறதா எனவும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 712ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3650 பேருக்கும், அடுத்தப்படியாக டெல்லியில் 1,893 பேருக்கும், மூன்றாவதாக மத்திய பிரதேசத்தில் 1,407 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை இறந்த பரிதாபம்