ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிறார்.