ETV Bharat / bharat

'இந்திய அரசியலமைப்பு அமலுக்குப்பின் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன' -உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. சிங்

ஹைதராபாத்: குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையே அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்தும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்தும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. சிங் தனது கருத்துகளை ஈடிவி பாரத் ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

SP Singh
SP Singh
author img

By

Published : Jan 26, 2020, 12:11 PM IST

நாடே குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. சிங், நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் 70 ஆண்டுகள் பழமையான இந்திய அரசியலமைப்பு குறித்தும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விவரிக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எஸ்.பி. சிங்:

மாற்றங்களுக்கும் அதனால் ஏற்படும் வளர்ச்சிகளும் ஒரு விலை கொடுக்க வேண்டும் என்கிறார் சிங்.

மேலும் "அரசியலமைப்பை ஏற்றபின் இந்தியாவுக்கு பல்வேறு பணிகள் இருந்தன. முதலில் வறுமையை ஒழிப்பது, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, அறிவியல் தொழில்நுட்பத்தை முன்னெடுப்பது. இதுமட்டுமின்றி நீதித்துறை, நிதித்துறை, வேளாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டிய நிர்பந்தமும் இந்தியாவுக்கு இருந்தது" என்றார், எஸ்.பி. சிங்.

அதேபோல்,"இப்போது நமது பாதுகாப்பு துறையைப் பார்த்தால், அது போதுமான அளவு வளர்ச்சியடைந்துள்ளது தெரியும். நம் நாட்டின் பாதுகாப்புத்துறை பல வளர்ந்த நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வலிமையுடன் உள்ளது. அந்நாடுகளுக்கு ஈடாக இல்லாவிட்டாலும் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுமட்டுமின்றி வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், இந்தியாவை தன்நிறைவு அடையச் செய்துள்ளது. மேலும், தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்திய தொழில்துறையும் பெரும் வளர்ச்சியை அடைந்தது. 1950ஆம் ஆண்டுக்குப் பின் சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்படத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக" எஸ்.பி. சிங் கூறினார்.

சட்டப்பிரிவு 370 குறித்தும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் எஸ்.பி. சிங்:

"ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிமான ஒன்று. எனவே அதை நீக்கியது என்பது சரியான முடிவு. அந்த சட்டப்பிரிவின் மூலம் லாபமடைந்த அரசியல் கட்சிகள்தான், இதை பெரும் பிரச்னையாக சித்தரிக்க முயல்கின்றன.

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் சரியே. கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்"என்றும் எஸ்.பி. சிங் வலியுறுத்துகிறார்.

சிஏஏ: ஆளும் கட்சியும் சரி; எதிர்க்கட்சியும் சரி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்:

"குடியுரிமை சட்டம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்ட ஒன்று. அது ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின், வங்காளத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டனர். இதுகுறித்து சரியான சட்டங்களும் அச்சிறுபான்மையினரைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பல தலைவர்கள் வலியுறுத்தினர்.

குடியுரிமையிலோ, குடியுரிமை வழங்குவதிலோ இந்திய குடிமக்களை பாதுகாப்பதிலோ யாரும் எந்த அரசியலும் செய்யக்கூடாது. நான் எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டவில்லை; ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அதேபோல நான் ஆளும் கட்சியையும் குற்றஞ்சாட்டவில்லை. இரு கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்" என்றும் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

Intro:Body:

S P Singh 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.