ETV Bharat / bharat

மோடி மீண்டும் பிரதமராக வர 70% மக்கள் விருப்பம் - எடியூரப்பா

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என நாட்டின் 70 விழுக்காட்டினர் விரும்புவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.

BS Yediyurappa  BS Yediyurappa on Modi  BS Yediyurappa news  BS Yediyurappa Karnataka  BS Yediyurappa on BJP  பாஜக  எடியூரப்பா  கர்நாடகா  மீண்டும் மோடி பிரதமர்  மோடி பிரதமராக 70 சதவீத மக்கள் ஆதரவு

author img

By

Published : Jun 2, 2020, 5:17 AM IST

Updated : Jun 2, 2020, 12:31 PM IST

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், மீண்டும் அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க நாட்டிலுள்ள 70 விழுக்காட்டினர் விரும்புவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.

இது குறித்து பெங்களூருவில் அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கியதால் பிரதமர் மோடியை இரும்பு மனிதர் என்று அழைக்கிறேன். நாட்டில் 70 விழுக்காட்டினர் இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும் என விரும்புகின்றனர்.

நரேந்திர மோடி தொலைநோக்குச் சிந்தனைகொண்ட தலைவர். அனைத்து மாநிலங்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். முத்தலாக் ஒழிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் என முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. மோடி ஒரு உலகத் தலைவர். கரோனா பாதிப்பைச் சமாளிக்க முடியாமல் உலகம் திணறிவருகிறது. ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை அவர் சிறப்பாகக் கையாளுகிறார்.

கரோனா நெருக்கடி, நாடு தழுவிய பொது அடைப்புக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்புத் திட்டத்தையும் அறிவித்துள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் உயிரிழந்த நபர்களைத் திரும்பிக் கொண்டுவர முடியுமா ? - மோடிக்கு சிவ சேனா கேள்வி!

Last Updated : Jun 2, 2020, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.