மத்தியப் பிரதேசம் ஷாஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர்யா பிரசாத் கட்டாரியா. இவரது மகன் கெளடில்யா கட்டாரியா அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும், கெளடில்யா கட்டாரியா, பைதான் (Python) புரோகிராமை முடித்துள்ளார். பள்ளி மாணவன் பைதான் (Python) தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளது, தற்போது கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதன்மூலம் உலகின் இளைய கணினி புரோகிராமர் என்ற சாதனையை கெளடில்யா பிடித்துள்ளார்.
இது குறித்து அச்சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “எனது மகன் இளம் வயதிலிருந்தே கேஜெட்களில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அவர் மற்ற பிள்ளைகள்போல் இல்லாமல் மடிக்கணினியில் விளையாட மாட்டார். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இல்லாத சூழலில் ஆன்லைன் கல்வி நடைமுறைக்கு வந்தது.
அவர் விளையாடுவதில் ஆர்வம் குறைவாகவும், புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் உள்ளார். மொபைல் மற்றும் மடிக்கணினியில் நிறைய புத்தகங்களைப் படிக்கிறார்" என்றார்.
முன்னதாக இளைய கணினி புரோகிராமர் என்ற சாதனையை அகமதாபாத்தைச் சேர்ந்த அர்ஹாம் ஓம் தல்சானியா வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் பணம் பறித்தக் கொள்ளையர்கள் - சிசிடிவி வெளியீடு