இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 324ஆக உயர்ந்துள்ள நிலையில், 23 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பால் வெளிநாட்டவர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 63 வயதான நபர் கடந்த 19ஆம் தேதி வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு உயர் ரத்த அழுத்தம், தீவிரமான நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இன்று காலை அவருக்கு இருதய நோய் பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில், மேலும் பிகாரைச் சேர்ந்த ஒருவர் கோவிட்-19ஆல் உயிரிழந்துள்ளார். கரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இவரின் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 38 ஆகும்.
இதையும் படிங்க: கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?