ஆறு வயது சிறுவன், தனது தாயுடன் இணைந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு இழுத்துச்சென்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த அம்மாவட்ட நீதிபதி, உடனடியாக மருத்துவமனை விரைந்து சிறுவனின் குடும்பத்தினரிடம் பேசினார். மேலும், அவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவும் இட்டார். இதுதொடர்பாக அறுவைச் சிகிச்சைப் பிரிவிலிருந்த வார்டு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சிறுவனின் தாயார் பிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு இழுத்துச்செல்ல வார்டு ஊழியர் 30 ரூபாய் கேட்பார். நான் பணம் தர மறுக்கும்போது ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல அவர் மறுத்துவிடுவார். அதனால், நானும் எனது மகனும் இணைந்து எனது தந்தையை ஸ்ட்ரெச்சரில் இழுத்துச் சென்றோம்" என்று சம்பவம் குறித்து விவரித்தார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பெண்ணை துன்புறுத்திய ரவுடி அடித்துக்கொலை!