மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு கட்டமாக நடைபெற்றுவரும் நிலையில், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
பிகார் 8, மேற்குவங்கம் 8, டெல்லி 7, ஹரியானா 10, ஜார்க்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, உத்தரப் பிரதேசம் 14 தொகுதிகள் என மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் அகிலேஷ் யாதவ், ஷீலா தீட்சித், மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.