அருணாசலப் பிரதேச மாநிலத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ள நிகினு பகுதியில் என்.எஸ்.சி.என்(National Socialist Council of Nagaland) பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியதில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ராணுவத்திற்கும் மோதல் வெடித்தது.
இந்த மோதலில் என்.எஸ்.சி.என் (National Socialist Council of Nagaland) அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து நான்கு ஏ.கே. 47 ரகத் துப்பாக்கி மற்றும் இரண்டு கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்த நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அருணாசலப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் உபாத்யாயா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நோபல் பரிசு வழங்கக்கோரி பாலத்தின் மேல் ஏறி பெண் அடாவடி...!