உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை லக்னோவிலிருந்து ஹார்டோய்க்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல், மற்றொரு பேருந்து ஹார்டோயிலிருந்து தலைநகர் லக்னோவிற்கு வந்து கொண்டிருந்தது.
இந்த இரண்டு பேருந்துகளும் லக்னோ-ஹார்டோய் சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், பன்னிரெண்டு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 3 நபர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.
இரு பேருந்துகளும் அதிவேகத்தில் சென்றதே இந்த விபத்திற்கான காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ”முகக்கவசம் அணிந்து வரச் சொல்ல நீ யார்?”