ETV Bharat / bharat

செப்டிக் டேங்க் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் செப்டிக் டேங்கில் இறங்கிய ஆறு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

6 person died in Jharkhand
6 person died in Jharkhand
author img

By

Published : Aug 9, 2020, 8:36 PM IST

ஜார்கண்ட் தியோகர் மாவட்டத்தில் செப்டிக் டேங்க் விஷ வாயு தாக்கி ஆறு பேர் இன்று (ஆகஸ்டு 9) உயிரிழந்துள்ளதாக எஸ்பி பியூஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இதில் உயிரிழந்தவர்கள் பிரஜேஷ் சந்திர பர்ன்வால்(50), மிதிலேஷ் சந்திர பர்ன்வால்(40), கோவிந்த் மஞ்சி(50), பாப்லு மஞ்சி(30), லாலு மஞ்சி(25), லீலு முர்மு(30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேவிபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள தேவிபூர் சந்தை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட ஒரு புதிய செப்டிக் டேங்கை பர்ன்வால் என்பவர் கட்டியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு தொழிலாளர்கள் காலையில் வீட்டின் செப்டிக் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கியுள்ளனர். நெடுநேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், வீட்டு உரிமையாளரின் இரண்டு மகன்களும் தொட்டியில் இறங்கியுள்ளனர்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் சத்தமிட்டு பார்த்தபோது உள்ளே சென்ற நான்கு பேரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் உள்ளே இறங்கி உள்ளனர். அவர்கள் ஆறு பேரும் நச்சுப் புகைகளை சுவாசித்து உள்ளே இறந்துள்ளனர் என்று பின்னர் தெரியவந்துள்ளது. அதன்பிறகு உள்ளூர் கிராமவாசிகள் தொட்டியைத் திறந்து உடல்களை மீட்டுள்ளனர் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.