அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜரில் ஆயுதங்கள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கூடுதல் காவல் துறை தலைவர் ஜிபி சிங் தலைமையிலான குழுவினர், தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஒரு வீட்டில் பயங்தர ஆயுதங்கள் வைத்திருந்த ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏ.கே 57 ரைபிள், ஹெச்.கே 33இ ரைபிள், 11 ஷெல்களுடன் ஒரு யுபிஜிஎல், எட்டு சீன வெடிகுண்டுகள், 300 ஏ.கே 56 தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: குழந்தையுடன் நின்ற பெண்ணை ஓடஓட விரட்டி கோடாரியால் தாக்குதல்! பதைபதைக்கும் சிசிடிவி