ETV Bharat / bharat

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் - பொது மக்கள் படுகாயம் - பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், பொது மக்கள் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

JK
JK
author img

By

Published : Aug 7, 2020, 8:29 PM IST

ஜம்மு காஷ்மீரின் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள குப்வாராவில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் எதிர்பாராத இந்தத் தாக்குதலுக்கு, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இத்தாக்குதலில் பொது மக்கள் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, பூஞ்ச், நவ்ஷேரா, பாரமுல்லா ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாகவே பாகிஸ்தான் ராணுவம் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாயமான ராணுவ வீரரின் சீருடைகள் ஆப்பிள் தோட்டத்தில் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.